தயவு செஞ்சு கருத்து சொல்லிடாதம்மா.. மனைவியை சைலன்ட் மோடுக்கு மாற்றிய நடிகர்

Gossip: கடந்த சில வருடங்களாக பெரிய குடும்பத்துக்கு நேரம் சரியில்லை. எது செஞ்சாலும் பேசினாலும் மீடியாவில் பிரச்சினையாக தான் முடிகிறது.

அதிலும் கடந்த படம் வாரிசு நடிகருக்கு சரியாக போகவில்லை. அது ஒரு பக்கம் இருந்தாலும் மனைவி தேவையில்லாமல் சொன்ன கருத்து தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.

அதிலும் படம் வெளிவந்த சமயத்தில் மீண்டும் கருத்து சொல்லி மாட்டிக் கொண்டார் மனைவி. அதுபோக சமீபத்தில் பட விழாவில் நடிகரின் அப்பா கூட வாரிசு பற்றி ஓவராக புகழ்ந்து தள்ளி இருந்தார்.

தயவு செஞ்சு கருத்து சொல்லிடாதம்மா

அதையும் விட்டு வைக்காமல் கலாய்க்க தொடங்கினார்கள். இதனால் வாரிசு நடிகர் குடும்பத்தாருக்கு அன்பான வேண்டுகோள் வைத்துள்ளாராம்.

எல்லாத்துக்கும் அமைதியா இருங்க. எதையும் ஓப்பனா பேச வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அதேபோல் மனைவியிடம் தயவு செஞ்சு எந்த கருத்தும் சொல்லாத என கெஞ்சாத குறையாக சொல்லி இருக்கிறார்.

தற்போது படமும் வெளியாகி விட்டது. வழக்கம் போல வேண்டும் என்று நெகட்டிவ் விமர்சனங்களும் பரவி வருகிறது. இதில் நடிகரின் மனைவி என்ன ரியாக்ட் செய்யப் போகிறார் என்பதை தான் கோடம்பாக்கம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.