நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு வந்தவர் தான் அந்த நடிகர். ஆனால் சினிமா ஒருவரை ஏற்றியும் விடும் இறக்கியும் விடும் என்பதற்கு ஏற்ப அவருடைய கடைசி காலம் வலிகள் நிறைந்ததாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நடிகருக்கு நடந்த திருமணம் தான்.
ஊரே மூக்கின் மேல் கை வைக்கும் அளவுக்கு கோலாகலமாக திருமணம் செய்து கொண்ட நடிகர் சில மாதங்களிலேயே மனைவியை பிரிந்தார். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த திருமண முறிவு நடிகரை கடும் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கியது.
அது மட்டுமல்லாமல் டாப் நடிகர் ஒருவரின் மனைவியுடன் நெருக்கம் காட்டும் அளவுக்கு வளர்ந்தது. அந்த நடிகரின் மனைவியும் நம்பர் ஒன் ஹீரோயின் தான். அவருக்கு தன் கணவர் மேல் இருந்த அதிருப்தி வேறு ஒருவருடன் நெருங்கி பழகும் நிலைக்கு தள்ளி இருக்கிறது.
நண்பனுக்கு துரோகம் செய்கிறோமே என்று இல்லாமல் அவருடைய மனைவியுடன் அதிகநருக்கம் காட்டி இருக்கிறார் இந்த நடிகர். திருமண வாழ்க்கையில் இருவருக்கும் ஏற்பட்ட விரக்தி அவர்கள் இருவரின் நெருக்கமான நட்புக்கு வழிவகுத்து இருக்கிறது.
ஆனால் அதுவே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. இருவரும் சினிமாவில் பலத்த தோல்விகளை சந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் நடிகர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.