மாத்தி மாத்தி பழிவாங்குறாங்களே.. நடிகையை பற்றி வதந்தியை கிளப்பியதே நடிகர் தானாம்

Gossip: இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பு செய்தியாக இருப்பது ஒல்லி நடிகரும் நம்பர் நடிகையையும் தான். இருவர் பற்றிய செய்திகள் தான் மீடியாக்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது.

இருவருக்கும் தனிப்பட்ட முறையில் இருந்த பிரச்சனையை நடிகர் சோசியல் மீடியாவில் அம்பலம் ஆக்கினார். நடிகரை பழிவாங்க வேண்டும் என அவர் செய்தது நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது.

பல நடிகைகள் அவருக்கு ஆதரவாக வந்தார்கள். ஆனால் நடிகர் அதை அசால்ட் ஆக டீல் செய்து விட்டார். அது மட்டும் இன்றி தற்போது அடுத்தடுத்து நடிகையை காண்டாக்கும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மாத்தி மாத்தி பழிவாங்குறாங்களே

இரு தரப்பிலும் இணைய கூலிப்படைகள் தீயாக இப்போது வேலை செய்து வருகிறது. நடிகரின் சமீபத்திய படத்தை ஓட விடாமல் செய்த பெருமையும் நடிகையைச் சேரும்.

இதனால் நடிகர் ரொம்பவே அப்செட். அதைத் தொடர்ந்து அவருடைய டீமை வைத்து நடிகை தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய வதந்தியை கிளப்பி விட்டு விட்டாராம். நடிகையை பிடிக்காத சில பிரபலங்களும் கூட்டு என்கின்றனர்.

போற போக்கை பார்த்தால் இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளிவர போகுதோ. இப்படி மாத்தி மாத்தி பழி வாங்கிக்கிறார்களே என விஷயம் தெரிந்தவர்கள் புலம்புகின்றனர்.