Gossip: மாஸ் நடிகர் ஒரு இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார். அதற்காக அவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கவனமாக செய்து கொண்டிருக்கிறார்.
இதனால் அவர் இதுவரை சந்திக்காத விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை கூட அவருடைய எதிர்ப்பாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இருந்தாலும் நடிகர் பொறுமையாக தான் இருக்கிறார். ஆனால் அவருடைய அல்லக்கைகள் அவரை பெருமையாக பேசுகிறேன் என்ற பெயரில் அவருக்கே ஆப்பு வைத்து வருகின்றனர். இதனால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் செம கோவத்தில் உள்ளனர்.
அல்லகைகளால் அப்செட்டில் நடிகர்
அப்புறம் என்ன சோசியல் மீடியாவில் மாறி மாறி சண்டை போட்டு பூகம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் நடிகர் தான் பயங்கர அப்செட்டில் இருக்கிறார். இது எங்கே தனக்கு பின்னடைவை கொடுத்து விடுமோ என்ற பயமும் அவருக்கு இருக்கிறது.
அதனால் தற்போது அவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு கட்டளை ஒன்றை போட்டுள்ளார். எது பேசுவதாக இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசிங்க. எல்லா அம்பும் நம்ம பக்கம் திரும்ப கூடாது என சொல்லி இருக்கிறாராம்.
இதனால் தற்போது அவருடைய விசுவாசிகள் கொஞ்சம் அடங்கி இருக்கின்றனர். ஆனாலும் சில ஸ்லீப்பர் செல்ஸ் நடிகர் மீது கரியை பூசுவதில் குறியாக இருக்கிறது.