ரொம்பவும் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து சினிமா ஆசையில் நடிக்க வந்தவர் தான் அந்த நடிகை. ஹீரோயின் கனவுடன் வந்த அவருக்கு ஆரம்பத்தில் சைடு ரோல்கள் தான் கிடைத்தது. இருப்பினும் அதுபோன்ற கேரக்டர்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒரு காலகட்டத்திற்கு பிறகு காமெடி கேரக்டர்களில் இறங்கி கலக்க ஆரம்பித்தார்.
அந்த சமயத்தில் புகழின் உச்சியில் இருந்த காமெடி நடிகர் இவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்டு இருக்கிறார். வாய்ப்புக்காக இந்த நடிகையும் அவருடன் சில காலங்கள் நெருக்கமாக இருந்திருக்கிறார். இது தெரிந்த நடிகரின் மனைவி சொர்ணாக்காவாக மாறி நடிகையை விட்டு விளாசி இருக்கிறார்.
இதனால் பயந்து போன அந்த நடிகை அதன் பின்னர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்திருக்கிறார். ஆனாலும் நடிகையின் மீது மயக்கத்தில் இருந்த நடிகர் மீண்டும் அவரை தொந்தரவு செய்ய ஆரம்பித்திருக்கிறார். அப்போது அவர் உங்கள் மனைவி என்னை தரகுறைவாக பேசுகிறார் என்று கூறி நடிகரின் ஆசைக்கு இணங்க மறுத்திருக்கிறார்.
இதனால் கடுப்பான அந்த நடிகர் நீ எப்படி சினிமாவில் நடிக்கிறாய் என்று பார்த்துக் கொள்கிறேன் என சவால் விட்டிருக்கிறார். மேலும் ஒரு மலையாள சேச்சியை தன் படத்தில் நடிக்க களமிறக்கினார். அதன் பிறகு அந்த நடிகையுடன் தான் அவர் பல காலம் குடும்பம் நடத்தினார். நடிகரின் இந்த அதிரடியால் அந்த காமெடி நடிகைக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
அந்த சமயத்தில்தான் அவர் வளர்ந்து வரும் ஒரு காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். அவரின் நல்ல நேரம் அந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியது. அதன் பிறகு முன்னேற தொடங்கிய நடிகை மிகப்பெரிய அளவில் உயர்ந்தார். தற்போது அந்த நடிகை காமெடி மட்டுமல்லாமல் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.