சமீபகாலமாக திரையுலகில் விவாகரத்து செய்திகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் முன்னணியில் இருக்கும் அந்த நடிகையின் விவாகரத்து அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால் நடிகையோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சுதந்திரமாக தன் போக்கில் ஜாலியாக வாழ ஆரம்பித்தார். அவருடைய அந்த சந்தோஷம் எல்லாம் வெறும் வெளிவேஷம் தான் என்று தற்போது தெரியவந்துள்ளது. ஏனென்றால் நடிகை தன்னுடைய காதலையும், கணவரையும் மறக்க முடியாமல் ரொம்பவே தவித்து வருகிறாராம்.
அதனால்தான் அவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டை பெரும் விலை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகை அந்த வீட்டில் தான் நேரத்தை அதிகமாக செலவிட்டு வருகிறாராம். கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த அந்த நாட்களை அசைபோடுவதன் மூலம் தன்னுடைய சோகத்தை மறக்க அவர் முயற்சி செய்கிறாராம்.
நடிகையின் இந்த நிலைமையை பார்த்து தற்போது திரையுலகமே அவர் மேல் பரிதாபப்பட்டு வருகிறது. ஆனாலும் இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் என்றும் சிலர் கமுக்கமாக பேசி வருகின்றனர். இது இப்படி இருக்க நடிகையின் மாஜி கணவர் புது காதலியை பிடித்து விட்டாராம்.
கடந்த சில மாதங்களாகவே நடிகர் பிரபல நடிகையுடன் காதலில் விழுந்ததாக செய்திகள் அடிபட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் அவர் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டிற்கு அடிக்கடி அந்த நடிகையை அழைத்துச் சென்று வருகிறாராம்.
மேலும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது நடிகைக்கு மிகுந்த மன வலியையும் கொடுத்துள்ளதாம். அதை போக்க தற்போது அவர் சினிமாவில் மேலும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம்.