குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் எறிந்த நடிகை.. நரகமான வாழ்க்கை

பொதுவாக தன்னுடைய விருப்பத்திற்காக நடிகையாக பலர் வந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் சிலர் வந்தது உண்டு. அதாவது குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற பொறுப்பு இருந்ததால் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் நடிகை ஆன பலர் உண்டு.

அப்படிதான் நடிகை ஒருவர் படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதனாலேயே நடிகைக்கு பேரும் புகழும் கிடைக்க குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த சம்பாத்தியமும் அவரது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை.

இதனால் வேறு வழி இல்லாமல் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை அட்ஜஸ்மென்ட் செய்ய ஆரம்பித்தார். இதுவும் தனக்கு சுத்தமாக விருப்பமில்லை என்றாலும் தனது குடும்பத்திற்காக மெழுகு பத்தியாய் உருகினார். தனது சகோதரர் மற்றும் சகோதரிகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்.

ஆனால் தான் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் நாட்களை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்தவுடன் நடிகையை தூக்கி எறிந்துவிட்டது. நடிகை தனது சொத்துக்கள் அனைத்தையுமே தனது பேரில் எழுதிக் கொள்ளாமல் சொந்த பந்தங்கள் பேரில்தான் எழுதி இருந்தார்.

இதனால் நடிகை கடைசியில் நிர்கதியாக நின்றார். இவ்வாறு குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் சென்று தனது வாழ்க்கையை நரகமாக்கி கொண்டார். ஒரு கட்டத்திற்கு மேல் வயதான காரணத்தினால் அம்மா, அண்ணி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து தனது அன்றாட தேவைகளை நடிகை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →