புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ஒருவர் தன் காதல் கணவருக்காக வக்காலத்து வாங்க போய் இப்போது கடும் அப்செட்டில் இருக்கிறாராம். என்னதான் நடிகை திரையுலகை ஆட்டி படைத்தாலும் அவருடைய கணவருக்கு அதிர்ஷ்டம் என்பது எட்டா கனியாக தான் இருக்கிறது. நடிகையை காதலிக்க ஆரம்பித்த பிறகு பிரபலமாக ஆரம்பித்த அந்த இயக்குனர் இப்போதும் மனைவியின் புகழ் வெளிச்சத்தில் தான் இருக்கிறார்.
அதன் மூலம் தான் டாப் நடிகரின் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. ஆனால் கைக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை இப்போது அவர் தொலைத்து விட்டு நிற்கிறார். இது பரபரப்பை கிளப்பிய நிலையில் எப்படியும் கணவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்று நடிகை படாத பாடு படுகிறார்.
இதற்காக தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய நடிகைக்கு தோல்விதான் கிடைத்தது. ஏனென்றால் நடிகையின் கணவர் மீது தயாரிப்பு தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது. இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து நடிகை ஹீரோவை சந்தித்து பேச பலமுறை முயற்சி எடுத்து இருக்கிறார்.
ஆனால் நடிகையின் கணவரால் ஹீரோ மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அந்த கடுப்பில் நடிகையை பார்க்க முடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நடிகை அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை என்று மீண்டும் முயற்சித்திருக்கிறார்.
ஆனால் அதற்கான பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். ஆக மொத்தம் கணவரின் பொறுப்பில்லாத தனத்தால் நடிகை தான் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு அவமானப்பட்டு நிற்கிறார். இருந்தாலும் கணவருக்கு எப்படியாவது மிகப்பெரிய வாய்ப்பை வாங்கி கொடுத்தே தீருவேன் என்ற முடிவில் அவர் தீவிரமாக இருக்கிறாராம். இதன் பிறகாவது இயக்குனர் சுதாரித்துக் கொண்டால் அவருடைய எதிர்காலம் வளமாக இருக்கும் என பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.