அடுத்தடுத்த தோல்வியால் தொழிலையே மாற்றிய நடிகை.. தண்டவாளத்தில் ஏறிய வண்டவாளம்

பிரபல நடிகை ஒருவரின் போக்கு சமீப காலமாக மாறி இருப்பதை பார்த்து கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. நடிக்க வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அந்த நடிகை சமீப பாலமாக தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.

இருந்தாலும் முன்னணி ஹீரோக்களிடம் வாய்ப்பு கேட்டு அவர் தொடர்ந்து தூண்டில் போட்டு வருகிறாராம். ஆனால் அதற்கு பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். இதனால் வேறு வழியில்லாமல் நடிகை தன்னுடைய தொழிலையே இப்போது மாற்றி விட்டாராம். அதாவது அவர் தமிழ் நடிகர்களை தெலுங்கு இயக்குனர்கள் பக்கம் திசை திருப்பும் வேலையில் சத்தம் இல்லாமல் இறங்கியுள்ளாராம்.

Also read: 2ம் திருமணம் செய்து கொண்ட எக்ஸ் புருஷன்.. 43 வயது விவாகரத்து நடிகரை வளைத்து போட்ட 36 வயது நடிகை

எப்படி என்றால் இப்போது கோலிவுட் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட மாஸ் ஹீரோ தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கூட்டணியில் ஒரு ஹிட் படத்தை கொடுத்திருந்தார். அவருக்கு முன்னரே கடவுள் நடிகரும் தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடித்திருந்தார்.

இப்படி முன்னணி ஹீரோக்கள் எல்லாம் தெலுங்கு இயக்குனர்கள் பக்கம் திரும்புவதற்கு பின்னால் நடிகை தான் இருக்கிறார் என்ற பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து நடிகை நடித்த படங்கள் மண்ணை கவ்விய நிலையில் இது போன்ற வேலையை பார்த்து அவர் கோடிக்கணக்கில் கல்லா கட்டி வருகிறாராம். அந்த வகையில் இங்குள்ள ஹீரோக்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் அணுக வேண்டும் என்றால் அதற்கு நடிகை தான் பாலமாக செயல்பட்டு வருகிறாராம்.

Also read: மனைவியின் சேட்டையை பார்த்து கடுப்பான கணவன்.. புது சகவாசத்தால் போடும் கெட்ட ஆட்டம்

இந்த விஷயம் இப்போது மீடியாவில் கசிந்து வருவதை பார்த்த நடிகையின் அம்மா பயத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். மகள் தேவையில்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்குவதை பார்த்து கலக்கத்தில் இருக்கும் அம்மா இதையெல்லாம் தூக்கிப்போட்டு விட்டு திருமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே நடிகையின் பெயர் சமீப காலமாக ரொம்பவும் டேமேஜ் ஆகி இருக்கிறது. இந்நிலையில் இப்படி ஒரு விஷயம் பரவி வருவது அவருக்கு நிச்சயம் ஆபத்தை தான் கொடுக்கும். அதனாலேயே நடிகையின் அம்மா இப்போது உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வருகிறார். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத நடிகை பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறாராம்.

Also read: நடிகையுடன் அந்தரங்க நேரத்தில் உயிரை விட்ட பிரபலம்.. பலான மருந்தால் வந்த விபரீதம்