Gossip: பிரபல நடிகர் வீட்டு பஞ்சாயத்து தான் சோசியல் மீடியாவில் களைகட்டி வருகிறது. மனைவியை பிரிந்த கையோடு நடிப்பில் அவர் பிஸியாக இருந்தார்.
ஆனால் அப்போதே அவர் பற்றிய கிசுகிசுவுக்கு பஞ்சமில்லை. அதற்கேற்றார் போல் மனைவியின் தரப்பில் அனுதாப அறிக்கையை விட்டு நடிகர் மீதான குற்றச்சாட்டை வலுப்படுத்தினார்கள்.
அந்தப் பிரச்சனை சில மாதங்களாக ஓய்ந்திருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த பெரிய வீட்டு விசேஷத்தில் நடிகர் தோழியோடு வந்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
நடிகர் குடும்பத்தில் கும்மியடித்த அழகிகள்
அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி மீண்டும் அனுதாப அறிக்கை விட்டார். உடனே எல்லோரும் நடிகர் மீது பாய்ந்தார்கள். அதிலும் சில நடிகைகள் மனைவி தரப்புக்கு சப்போர்ட் செய்தனர்.
பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் இப்போது மனக்குமுறலை கொட்டி விட்டார். அதிலும் முன்னாள் மனைவிக்கு சில தீய சக்திகள் தவறான அறிவுரையை கொடுக்கின்றனர் என போட்டு உடைத்து விட்டார்.
அதாவது நடிகரின் மனைவிக்கு பெரிய நட்பு வட்டாரம் இருக்கிறது. முன்னாள் கதாநாயகிகள் தொடங்கி பிரபல பெண் தயாரிப்பாளர் என பல தோழிகள் உள்ளனர்.
எல்லோரும் பார்ட்டி ஷாப்பிங் என என்ஜாய் செய்வது உண்டு. அவர்கள்தான் நடிகரின் குடும்பத்தில் கும்மி அடித்திருக்கின்றனர். நல்லா இருந்த குடும்பம் இப்படி ஆயிடுச்சு என இப்போது நடிகருக்கு ஆதரவான பேச்சுக்களும் எழுந்துள்ளது.