தீராத காதலால் எதையும் செய்யத் துணிந்த நடிகை.. என்ன செய்தாலும் சந்தேகப்பட்ட நடிகர்.!

டாப் ஹீரோக்களிடம் ஜோடி போட்டு நடித்த நடிகை ஒருவருக்கு நடிகர் ஒருவர் மீது தீராத காதலில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து வந்துள்ளனர். இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் நடிகை உறுதியாக இருந்துள்ளார்.

ஆனால் அந்த நடிகர் அவ்வளவு பிரபலம் இல்லை. அந்த சமயத்தில் நடிகையோ கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்திருந்தார். எந்நேரமும் படப்பிடிப்பிலேயே நடிகை பிஸியாக இருந்ததால் அந்த நடிகரை சந்தோஷபடுத்த முடியவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் நடிகருக்காக நடிகையும் தனது பிசியான செடுலில் நேரம் ஒதுக்க ஆரம்பித்தார். ஆனால் நடிகை எது செய்தாலும் அதில் ஏதாவது குத்தம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்துள்ளார் நடிகர். அதுமட்டுமின்றி கண்டபடி கேட்ட வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து வெறுத்துப் போன அந்த நடிகை இப்படி பேசுபவன் என் வாழ்வில் இருக்கக் கூடாது போடா என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனால் நஷ்டம் அடைந்தது என்னவோ அந்த நடிகர் தான். ஏனென்றால் அதன் பிறகு நடிகை தனது கேரியரில் பீக்கில் சென்று விட்டார்.

அதுமட்டுமின்றி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் அவருக்கு இப்போது ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அந்த நடிகைக்கு இப்போதும் எக்க சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →