நடிகைகள் இயக்குனரை காதலிப்பது, திருமணம் செய்து கொள்வது ஒன்றும் திரையுலகில் புதிதல்ல. மூத்த நடிகைகள் முதல் நம்பர் நடிகை வரை அதற்கு உதாரணமாக சொல்லலாம். ஆனால் இளம் நடிகை ஒருவர் 40 வயதை தாண்டிய இயக்குனரை காதலித்து ரகசிய குடித்தனம் நடத்தி தற்போது எஸ்கேப் ஆனது தான் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கோலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் அந்த இளம் நடிகை தற்போது பக்கத்து மாநிலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அங்கு நடிகையை வைத்து படம் எடுத்த இயக்குனருடன் அவருக்கு நட்பு மலர்ந்திருக்கிறது. அது நாளடைவில் காதலாகவும் மாறி இருக்கிறது.
உருகி உருகி காதலித்த இருவரும் நேரம் காலம் பார்க்காமல் மணி கணக்கில் பேசுவது, பொது இடங்களில் சுற்றித் திரிவது என்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். மேலும் ஒரே வீட்டிலும் ரகசியமாக வாழ்ந்து வந்தனர். இந்த விஷயம் மீடியாக்களில் கொஞ்சம் கொஞ்சமாக கசிய ஆரம்பித்தது.
அவர்கள் இருவரும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் உலா வந்தது. இதை சம்பந்தப்பட்ட இருவரும் மறுக்கவும் இல்லை ஆமாம் என்று சொல்லவும் இல்லை. ஆனாலும் அவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் போட்டோக்கள் அடிக்கடி இணையதளத்தில் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் நடிகை திடீரென நான் யாரையும் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்யும் முடிவிலும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து விட்டு நடிகை திடீரென அந்தர் பல்டி அடிப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த விஷயம் மூலம் நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கின்றனர். ஏற்கனவே நடிகைக்கு இப்போது பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டது. இதில் இந்த காதல் விவகாரம் வேறு சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் தான் நடிகை இப்படி ஒரு அறிவிப்பு கொடுத்து விட்டாராம்.