ஷூட்டிங் வராமல் டிமிக்கி கொடுத்த நடிகை.. தயாரிப்பாளர் கொடுத்த அதிர்ச்சி

Gossip: அந்த பிரபல நடிகை சமீபகாலமாக ஏகப்பட்ட பஞ்சாயத்துகளில் சிக்கி வருகிறார். தேவையில்லாமல் எதையாவது பேசி வாங்கி கட்டிக் கொள்வது தான் இவருக்கு வாடிக்கை.

அப்படித்தான் கருத்து சொல்றேன்னு கிளம்பி மூக்குடைப்பட்டார். அந்த பஞ்சாயத்து இப்போது வரை தொடர்கிறது. இவரால் கணவருக்கு கூட பிரச்சனைதான்.

இந்நிலையில் நடிகை சூட்டிங் வராமல் டிம்மிக்கு கொடுத்த சங்கதி வெளியில் வந்திருக்கிறது. அக்கட தேசத்து பெரிய நடிகரின் படத்தில் நடிக்க இவர் ஓகே சொல்லி இருக்கிறார்.

தயாரிப்பாளர் கொடுத்த அதிர்ச்சி

நடிகை கேரக்டர் பிடித்தால் மட்டுமே நடிக்க வருவார். அப்படி அவர் ஓகே சொன்ன கதையில் இப்போது வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார்.

இதற்கு காரணம் படப்பிடிப்பு நேரத்தில் நடிகை கணவருடன் ஜாலி சுற்றுலா சென்றதுதான். அவருக்காக பட குழுவினர் அங்கே வெயிட் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் இவரோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. இதனால் டென்ஷனான தயாரிப்பாளர் புகழ்பெற்ற நடிகையை கமிட் செய்து விட்டார்.

இப்படி ஒவ்வொரு பிரச்சனையாக இழுத்து வரும் நடிகை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. இதெல்லாம் எங்கு போய் முடிய போகுதோ.