முன்பெல்லாம் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு என்று சில குறிப்பிட்ட நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது முன்னணியில் இருக்கும் நடிகைகளே எந்த நிபந்தனையும் இல்லாமல் அரைகுறை உடையில் வந்து ஆட்டம் போடுகின்றனர். அதற்கு ஈடாக அவர்கள் பல மடங்கு சம்பளத்தையும் வாங்கி விடுகின்றனர்.
அந்த வகையில் இப்போது உலக அளவில் பிரபலமாக இருக்கும் அந்த நடிகை டாப் நடிகர் ஒருவருடன் போட்ட கெட்ட ஆட்டம் சோசியல் மீடியாவையே கலக்கி கொண்டிருக்கிறது. அந்த நடிகை கிளாமர், ஹோம்லி என்று எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்தி விடுவார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவர் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த படத்தில் நடிகையின் இந்த கிளாமர் தரிசனத்தை பற்றிய பேச்சு தான் இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.
கணவருடன் இணைந்து நடிக்கும் போது கூட இப்படி ஒரு தாராளத்தை காட்டாத நடிகை அந்த முன்னணி நடிகருக்கு மட்டும் எந்த கண்டிஷனும் சொல்லாமல் கிளாமராக நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார். இதுதான் தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை எப்படி இதற்கு ஓகே சொன்னார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையில் தயாரிப்பாளர் பல மடங்கு சம்பளத்தை வாரி கொடுக்கிறேன் என்று சொன்னதால் தான் நடிகை இதற்கு சம்மதித்தாராம். அந்த வகையில் நடிகை இந்த ஒரு படத்திற்கே இரண்டு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை வாங்கி விட்டாராம். நடிகையின் இந்த சாமர்த்தியத்தை பார்த்து முன்னணி நடிகைகளும் களத்தில் குதிக்க முடிவெடுத்துள்ள செய்தியும் பகீர் கிளப்பி இருக்கிறது.