நா அப்படி பட்ட பொண்ணு இல்ல.. மிரண்ட நடிகையை மகுடிக்கு ஆடும் பாம்பாக மாற்றிய ஹீரோ

பார்ப்பதற்கு அமுல் பேபி போல் இருக்கும் அந்த நடிகையை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. எல்லோரிடமும் இயல்பாக பழகும் அவர் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயத்திற்கு மட்டும் பிடி கொடுக்கவே மாட்டார். அதனாலேயே அவர் சில வாய்ப்புகளையும் தவற விட்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவரை பிரபல ஹீரோ ஒருவர் தன் வழிக்கு கொண்டு வந்து நினைத்ததை சாதித்து காட்டி இருக்கிறார். அதாவது நடிகரின் படத்தில் நடிகை கமிட்டான போதே நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்.

இயக்குனரும் எந்த பிரச்சனையும் வராது என்று கூறி ஷூட்டிங்கை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் ஹீரோவுக்கு இந்த நடிகையின் மீது ஒரு கண் இருந்திருக்கிறது. அதை தொடர்ந்து தன் ஆசையையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அவரோ ஹீரோவின் மூஞ்சில அடித்த மாதிரி முடியாது என்று மறுப்பு சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து நல்ல பிள்ளையாக கொஞ்ச நாள் வலம் வந்த அந்த நடிகர் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே நடிகையை மடக்கி இருக்கிறார்.

இது எப்படி சாத்தியம் என்று படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கே ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு முரண்டு பிடித்த நடிகை அந்த ஹீரோவோடு சகஜமாக பழகி இருக்கிறார். இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் என்று கோலிவுட்டில் இதை தற்போது சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →