Gossip: ஆரம்பத்தில் நெய் குழந்தை போல் இருந்த அந்த நடிகை முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து விட்டார். அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் வாரிசு நடிகரை காதலித்தார்.
ஆனால் வந்ததும் தெரியல போனதும் தெரியல என்பது போல் இவர்களின் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. அதை அடுத்து நடிகை நம்பர் நடிகைக்கு போட்டியாக உடம்பை குறைத்து வலம் வந்தார்.
ஆனால் புது புது நடிகைகளின் வரவால் இவருடைய மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் காண தொடங்கியது. அவரும் பல ஆபர் கொடுத்து வாய்ப்புகளை பிடித்தார். எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை.
நடிகையை சுற்றும் கர்மா
சரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதையை தேர்ந்தெடுப்போம் என அந்த ட்ராக்குக்கு போனார். அதுவும் கை கொடுக்கவில்லை. இதற்கு மேல் சரிப்பட்டு வராது என தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே திருமணம் ஆனவரை தான் இந்த நடிகைக்கு பிடித்திருந்தது. இத்தனைக்கும் நடிகையின் தோழியின் கணவர் தான் அவர். இப்படி நம்பிக்கை துரோகம் செய்து செட்டில் ஆனார் நடிகை.
ஆனால் இப்போது பார்த்தால் அவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்திருக்கிறாராம். விரைவில் விவாகரத்து செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.