தன் முதல் படத்திலேயே அசாத்திய திறமையை காட்டி அனைவரையும் கவர்ந்தவர் தான் அந்த நடிகை. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதனாலேயே நடிகைக்கு இரண்டாம் தர ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது.
இருந்தாலும் அந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொண்ட நடிகை செகண்ட் ஹீரோயின் கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போகவே கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பிய நடிகை அனைவரும் அதிர்ச்சியாகும் அளவுக்கு ஒரு திரைப்படத்தில் நடித்தார்.
விடலை பசங்களுடன் நடிகை நடித்திருந்த அந்த படத்தை பார்த்த சென்சார் போர்ட் அதிகாரிகள் கதி கலங்கி போயிருக்கின்றனர். ஏனென்றால் அப்படத்தில் இருந்த அத்தனை காட்சிகளும் பிட்டு படத்தில் இருப்பது போன்று இருந்திருக்கிறது. அதில் நடிகையும் ஓவர் கிளாமர் காட்டி இருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுப்பது என்று தெரியாமல் முழித்த அதிகாரிகள் இயக்குனரிடமே இது குறித்து கேட்டிருக்கின்றனர். அதன் பிறகு 36 இடங்களில் அந்த படத்திற்கு கத்தரி போட்டு அனுப்பி இருக்கின்றனர். அப்படி என்றால் அந்த படம் எந்த அளவுக்கு மோசமாக எடுக்கப்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இப்படி அமளி துமளியுடன் வெளிவந்த அந்த படத்தை பார்த்த பலரும் நடிகை வாய்ப்புக்காக இந்த அளவுக்கு இறங்கி விட்டாரே என விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து நடிகைக்கு வந்த ஒரு சில வாய்ப்புகளும் நின்று போனது. பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலான நடிகை இப்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வருகிறார்.