சில காலங்களுக்கு முன்பு ரசிகர்களின் கனவு கன்னியாக கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தவர் தான் அந்த பப்ளி நடிகை. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என்று இருந்த அந்த நடிகை நம்பர் நடிகையை பார்த்து தன் உடல் எடையை அநியாயத்திற்கு குறைத்தார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு.
ஏனென்றால் கொள்ளை அழகுடன் இருந்த அந்த நடிகை உடல் எடையை குறைத்த பிறகு ஏதோ வியாதி வந்தவர் போல் எலும்பும் தோலுமாக காட்சியளித்தார். இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. ஆனாலும் அவர் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இருப்பினும் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட் அவ்வளவுதான் என்று புரிந்து கொண்ட அந்த நடிகை தற்போது மற்ற நடிகைகளை போல செட்டிலாக முடிவெடுத்துவிட்டார்.
அதன்படி நடிகை தற்போது தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே ஒரு நடிகரை காதலித்து பிரேக் அப் செய்த அந்த நடிகை தற்போது ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கு ஒரு புறம் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்க தற்போது அவருடைய காதல் திருமணத்தில் இருக்கும் ஒரு விஷயம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
அதாவது நடிகை தற்போது கல்யாணம் கட்ட இருக்கும் மாப்பிள்ளை ஏற்கனவே திருமணம் ஆனவராம். அதுவும் நடிகையின் நெருங்கிய தோழியை தான் அவர் திருமணம் செய்து விவாகரத்து செய்திருக்கிறார். அந்த திருமணத்திற்கு நடிகையே சென்று வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடியும் இருக்கிறார்.
அப்புறம் எப்படி இந்த கல்யாணம் என்று கேட்டால் அதுதான் மகா கேவலம். அதாவது தோழியின் கணவருடன் எதார்த்தமாக பழக ஆரம்பித்த இந்த நடிகை பிறகு உண்மையாகவே காதலிக்க ஆரம்பித்து இருக்கிறார். இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை எதிர்பார்க்காத தோழி தற்போது கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இதற்காகவே காத்திருந்த அந்த நடிகை தற்போது தன்னுடைய கல்யாண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விஷயம் தான் தற்போது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.