வாடகை தாயிடம் தஞ்சமடைந்த நடிகை.. அழகை காப்பாற்றிக்கொள்ள செய்த வேலை

சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் அழகுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அரிதிலும் அரிதாக சில நடிகைகள் சரியான வயதில் திருமணம், குழந்தை என்று வாழ்ந்து வந்தாலும், சில நடிகைகள் அழகுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. சினிமாவில் கொடி கட்டி பறக்கும் அந்த நடிகை சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் அடுத்தடுத்து தேனிலவுக்கு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவை ரணகளப்படுத்தியது.

இந்நிலையில் நடிகை திடீரென தான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டதாக புது குண்டை தூக்கி போட்டுள்ளார். இந்த விஷயம் தற்போது விவாதமாக மாறியுள்ள நிலையில் வாடகை தாய் மூலம் நடிகை குழந்தை பெற்றிருப்பதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மீடியாவில் இப்படி ஒரு செய்தி பரவி வந்தது. தற்போது அதை உண்மையாக்கும் வகையில் நடிகை இரண்டு ஆண் குழந்தைகளின் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். நடிகை இப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகை தனக்கு மார்க்கெட் இருக்கும்போதே சொத்துக்களை சேர்த்து விட நினைத்துள்ளார். அதனால் தான் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்துள்ளதாக பலரும் பேசி வருகின்றனர்.

மேலும் உடல் எடையை குறைக்க நடிகை எடுத்துக் கொண்ட மருந்துகளின் பக்க விளைவதால் தான் இப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அதற்காக சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத நிலையில் தான் இப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக சினிமா வட்டாரத்தில் சலசலக்கப்படுகிறது.