Gossip: வெண்ணெய் குழந்தை போல் இருக்கும் அந்த நடிகை மீது இப்போது அக்கட தேசத்து சினிமா வட்டாரம் ஒரு கண் வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அந்த விவகாரம் தான்.
அக்கட தேசத்தில் முந்தைய ஆட்சியில் நடந்த ஒரு முறைகேடு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் சந்தேக வட்டத்திற்குள் வந்தனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக வளையத்தில் ஒயிட் பியூட்டி நடிகையும் இருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். அதுவும் இந்த விவகாரம் சாதாரணமானது கிடையாது. 300 கிலோ தங்கம் தொடர்பான பிரச்சனை என்பதால் மீடியாக்களின் கவனமும் அதிகமாக இருக்கிறது.
சம்பந்தப்பட்ட நடிகை தன்னுடைய நிறுவனத்தின் மூலம் இத்தனை கிலோ தங்கத்தை வாங்கி இருக்கிறார். அது மட்டும் இன்றி இந்த வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்ட முக்கியமானவருடன் நடிகை தனி விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.
வசமாக சிக்க போகும் ஒயிட் பியூட்டி
இது எல்லாம் சேர்த்து அவர் மீது இருக்கும் சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த விசாரணை அதிவேகமாக நடந்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் சிக்கலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.
இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக வெளிவராத காரணத்தினால் நடிகை சிக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருக்கிறது. ஏற்கனவே காதல் தோல்வியால் விரக்தியில் இருந்த நடிகை இப்போது அடுத்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.