தமிழ் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் வெகு பிரபலமானவர் தான் அந்த நடிகை. பார்ப்பதற்கு குடும்ப பாங்காக பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கும் அந்த நடிகைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்பொழுது டாப்பில் இருக்கும் அத்தனை நடிகர்களுக்கும் ஜோடியாக அவர் நடித்திருக்கிறார்.
எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தாரோ அதே அளவுக்கு அவர் ஏராளமான சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார். நடிக்க வந்த காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த அவரை ஒரு பிரபல தொழிலதிபருக்கு ரொம்பவும் பிடித்து போனது.
அதன் விளைவாக அவர் நடிகையிடம் நேரடியாகவே தன்னுடைய விருப்பத்தை கூறியிருக்கிறார். ஆனால் நடிகையோ அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்திருக்கிறார். ஆனாலும் விடாத அந்த தொழிலதிபர் மார்க்கெட்டில் புதுசு புதுசாக வந்து இறங்கும் நகைகள் அனைத்தையும் அந்த நடிகைக்கு பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.
மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியாக இருக்கும் அவர் தன்னுடைய விளம்பர படங்களில் கூட நடிகையை தான் நடிக்க வைத்தார். இப்படி நடிகையை இம்ப்ரஸ் செய்வதற்காக ஒவ்வொரு முயற்சியாக எடுத்துக் கொண்டே வந்த அந்த தொழிலதிபருக்கு சரியான பலனும் கிடைத்தது.
விலை உயர்ந்த நகைகளை பார்த்து மயங்கிய அந்த நடிகை தொழிலதிபரின் ஆசைக்கு சம்மதித்திருக்கிறார். அதன் பிறகு நான்கு வருடம் அவர்கள் இருவரும் ரகசிய குடித்தனம் நடத்தி வந்தனர். இது அரசல் புரசலாக பல நாளிதழ்களிலும் கிசுகிசுக்களாக வெளிவந்தது.
ஆனாலும் இதையெல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நடிகையின் மேல் ஓவர் லவ்வில் இருந்த அந்த தொழிலதிபர் சினிமாவில் அவரை நெருக்கமாக நடிக்க கூடாது என்று கட்டளை விதித்தார். இதை ஏற்க முடியாத நடிகை சினிமா தான் முக்கியம் என்று அந்த தொழிலதிபரை விட்டு பிரிந்தார்.
அதன் பிறகு பல வருடங்கள் ஹீரோயினாக ஜொலித்த அந்த நடிகை இப்போது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இப்போதும் கூட நடிகை மீது பலருக்கும் ஒரு கண் இருக்கிறது. ஆனாலும் நடிகை தன்னுடைய குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு அவ்வப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.