காதலுக்கு கண்ணு மட்டும் இல்ல வயசும் கிடையாது.. வயதானவரை திருமணம் செய்த பிரபலம்

Gossip: காதல் விவாகரத்து எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. சாதாரண மக்களில் தொடங்கி பிரபலங்கள் வரை இதை கேஷுவலாக கடந்து செல்கின்றனர்.

கடந்த வருடம் மட்டுமே திரையுலகில் ஏகப்பட்ட விவாகரத்து சம்பவங்களை பார்த்தோம். அப்படித்தான் அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிரபலமும் காதலித்து மணமுடித்தவரை விவாகரத்து செய்தார்.

ஆனால் இதைப்பற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் மௌனமாகவே தன் வேலைகளை பார்த்து வந்தார். திடீரென இப்போது பார்த்தால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

வயதானவரை திருமணம் செய்த பிரபலம்

அதிலும் தன்னைவிட 10 வயது பெரிய நபரை அவர் கல்யாணம் செய்து கொண்டது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கம் போல நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த பிரபலமும் இரண்டு வருடங்களாக தன் காதலை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்திருக்கிறார். தற்போது அனைவரின் சம்மதத்தோடு காதலரை கரம் பிடித்துள்ளார்.

அதேபோல் தன்னை பற்றி வரும் விமர்சனங்களையும் அவர் கண்டு கொள்ளவில்லை. காதலுக்கு கண்ணு மட்டும் இல்ல வயசும் கிடையாது என சின்னத்திரை வட்டாரத்தில் சலசலத்து வருகின்றனர்.