தனக்கே உரிய பாணியில் திரைப்படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளை கண்டவர் தான் அந்த இயக்குனர். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் அவர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அந்த இயக்குனருக்கு திடீரென்று அரசியல் ஆசை துளிர்விட்டுள்ளது.
சமீப காலமாக அந்த இயக்குனரை பல அரசியல் விழாக்களிலும் காண முடிகிறது. இதனால் இயக்குனர் கூடிய விரைவில் அரசியல் கட்சியில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். இதற்காகவே காத்திருந்தது போல் பிரபல அரசியல் தலைவர்களும் அந்த இயக்குனரை வளைத்து போட முயற்சி எடுத்து வருகின்றனர்.
சாமர்த்தியமாக பேசுவதில் கில்லாடியான அந்த இயக்குனர் தங்கள் கட்சியில் இருந்தால் எப்படியும் சாதித்து விடலாம் என்று ஒரு கட்சி பயங்கர பிளான் போட்டு வருகிறதாம். அதற்கேற்றார் போல் அந்த பிரபல அரசியல்வாதியும் இயக்குனரை தங்கள் கட்சியின் பக்கம் இழுக்க வெளிப்படையாகவே தூண்டில் போட்டு வருகிறார்.
இதுதான் தற்போது திரையுலக வட்டாரத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் சாதித்த பல பிரபலங்கள் அரசியலில் என்ட்ரி கொடுத்து வெற்றி பெற்று வருகின்றனர். அதில் சிலர் மிகப்பெரிய அளவில் ஜொலித்தாலும் பலருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில்லை.
இருந்தாலும் சினிமா பிரபலங்களுக்கு இந்த அரசியல் ஆசை மட்டும் விடுவதே கிடையாது. இப்படி அந்த இயக்குனருக்கு லேசாக எட்டிப் பார்த்த அரசியல் ஆசை தற்போது முற்றிலுமாக போய்விட்டதாம். அந்த அளவுக்கு தன்னை சுற்றி வரும் பெரிய தலைகளை பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டாராம்.
அதனால் தேவை இல்லாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அவர் தற்போது அமைதி காத்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் இயக்குனருக்கு நெருக்கமான சிலரும் வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.