விளம்பரம் என்ற பெயரில் அரங்கேறிய அந்தரங்க கூத்து.. இளம் நடிகையின் காலடியில் கிடக்கும் இயக்குனர்

ஒரு படம் மக்களை சென்றடைய வேண்டும் என்றால் அதற்கு சில ப்ரமோஷன் செய்ய வேண்டும். எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் இது போன்று விளம்பரப்படுத்தினால் தான் வசூலில் கல்லா கட்ட முடியும். அதனால் தான் இப்போது பலரும் வித்தியாசமான முறையில் தங்கள் படங்களை விளம்பரம் செய்து வருகிறார்கள்.

அதில் சில நாட்களுக்கு முன் ஒரு இயக்குனர் செய்த பிரமோஷன் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. எப்போதுமே சர்ச்சையான படங்களை இயக்குவதில் அந்த இயக்குனர் பயங்கர கில்லாடி. யாரும் எடுக்காத கதையை இயக்கப் போகிறேன் என்று விவகாரமான படங்களை எடுக்கும் அந்த இயக்குனர் சமீப காலமாக படுமோசமான படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் நல்ல பெயருடன் இருந்த இயக்குனர் போகப்போக அவரின் செயல்பாடுகளின் காரணமாக ரசிகர்களிடம் நன்றாக வங்கி கட்டிக் கொண்டார். தேவையில்லாமல் யாரையாவது சீண்டுவது, சர்ச்சையான கருத்தை தெரிவிப்பது என்று அவர் சில மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அப்படித்தான் இப்போதும் தான் இயக்கி இருக்கும் ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர் செய்த விஷயம் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளிநாடுகளில் சகஜமாக பார்க்கப்படும் ஒரு சமாச்சாரத்தை அந்த இயக்குனர் இப்போது படமாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் நடித்த இளம் நடிகையின் காலடியிலேயே விழுந்து கிடக்கிறார் இந்த 60 வயது இயக்குனர். அதாவது சமீபத்தில் அந்த இயக்குனர் நடிகையின் காலடியில் அமர்த்துக்கொண்டு அவருடைய காலை மசாஜ் செய்வது, முத்தமிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

பலரையும் முகம் சுளிக்க வைத்த அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வந்தனர். ஆனாலும் கவலைப்படாத அந்த இயக்குனர் நாய்க்குட்டி போன்று அந்த நடிகையை சுற்றிக் கொண்டிருக்கிறாராம். கேட்டால் இதெல்லாம் படத்துக்காக செய்யும் பிரமோஷனாம். விளம்பரம் என்ற பெயரில் நடிகையுடன் இவர் அடிக்கும் இந்த கூத்து பற்றி தான் தற்போது திரையுலகில் சலசலக்கப்பட்டு வருகிறது.