Gossip: எந்தவித மேக்கப்பும் இல்லாமல் நேஷனல் பியூட்டியாக இளசுகளை கவர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் பின்னாளில் சினிமா வாய்ப்புகளைப் பெற்று நடிகையானார். முதல் படமே ஹீரோயினாக நடித்ததும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெறுவதற்காகவே சோசியல் மீடியாவில் கிளாமர் தூக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டார்.
அப்போதுதான் பிரபல இயக்குனரின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அந்த இயக்குனரும் படத்தில் இவர் தான் ஹீரோயின் என சொல்லிக் கூப்பிட்டு இருக்கிறார். இவரும் ஆசை ஆசையாய் ஹீரோயின் ரோல் என்று நம்பி போயிருக்கிறார்.
போனதும் 80 கிலோ வாழை மரத்தை கையில் தூக்கிக்கொண்டு நடக்கும்படி சொல்லிவிட்டார். உடனே அந்த ஹீரோயினும் சரி கதாநாயகியின் கதாபாத்திரம் அப்படித்தான் இருக்கும் என நம்பி இயக்குனர் சொன்னதை எல்லாம் செய்திருக்கிறார்.
மொக்கை வாங்கின நடிகை
ஆனால் கடைசியில் பார்த்தால் அவர் ஹீரோயினே இல்லையாம். ஹீரோயின் ஓட அக்கா ரோலில் நடிக்க வைத்திருக்கின்றனர். அந்த இயக்குனரும் அந்த நடிகையை இஷ்டத்திற்கு பயன்படுத்தி கடைசியில் மொக்க பீசாக காட்டிவிட்டார். அது மட்டுமல்ல அவர் நடித்த பாதி சீன் படத்துல இல்லையாம்.
எல்லாத்தையும் கட் பண்ணிட்டாங்க. இப்படி அந்த நடிகையை இயக்குனர் படுமோசமாக ஏமாற்றியதை நினைத்து இப்போதும் புலம்பி தள்ளுகிறார். ‘ஒரு மாட்டுக்கு ஒரு சூடு’ இனிமே இதுபோன்று நடக்கக்கூடாது என இப்போதெல்லாம் படத்தின் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் அந்த நடிகை படத்தில் கமிட் ஆகிறாராம்.