மார்க்கெட் போன நடிகையின் பலே திட்டம்.. எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்

Gossip: நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விட்டால் உடனே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். அதுவும் இல்லை என்றால் அம்மா கேரக்டருக்கு ப்ரமோஷன் வாங்கி விடுவார்கள்.

அப்படித் தான் ஒரு காலத்தில் கனவு கன்னியாக இருந்த இந்த நடிகை தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு பிடித்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பார்.

அதனால்தான் அவரை எப்போதாவது படங்களில் பார்க்க முடிகிறது. ஆனாலும் சோசியல் மீடியாவில் இவர் ஆக்டிவாக தான் இருக்கிறார். தோழிகளுடன் ஜாலி பண்ணுவதில் தொடங்கி வெளிநாடு ட்ரிப், பார்ட்டி என என்ஜாய் செய்து வருகிறார்.

எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்

ஆனால் அதெல்லாம் சரிப்பட்டு வராது என தற்போது நடிகை அரசியல் பக்கம் வருவதற்கான வேலைகளை தொடங்கி விட்டார். இதற்கு பெரிய இடத்து சப்போர்ட் இருக்கிறது.

அதேபோல் முக்கிய கட்சியும் நடிகையை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டது. இதை வைத்து தங்களுக்கான மவுசை அதிகப்படுத்தி கொள்ளலாம் என்பது அவர்களின் திட்டமாம்.

ஆனால் மார்க்கெட் போன நடிகையை வைத்து இது சாத்தியமா என்பது தெரியவில்லை. இதெல்லாம் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை. நடிகைக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.