அத்துமீறி நடந்ததால் நம்பர் நடிகைகளுக்கு வந்த மருத்துவ சிக்கல்.. 40 வயதிலும் முரட்டு சிங்கிளாக சுற்றுவதன் பின்னணி

நடிகைகள் சினிமாவில் தங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிலும் அழகை பாதுகாக்க மருந்துகள், ஊசிகள், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற விபரீத செயல்களில் இறங்கி சில பின் விளைவுகளையும் சந்தித்து வருகின்றனர்.

ஒரு சில நடிகைகள் இது போன்ற விஷயங்களில் சிக்காமல் நாசுக்காக திருமணம், குழந்தை என்று செட்டில் ஆகி விடுகின்றனர்.

ஆனால் அழகும், பணமும் தான் முக்கியம் என்று இருக்கும் நடிகைகள் தான் தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் வாடகை தாயிடம் தஞ்சம் அடைகின்றனர்.

அதற்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பவர் தான் பெரிய நம்பர் நடிகை. கடந்த சில நாட்களாகவே அவருடைய விஷயம் பரபரப்பை கிளப்பி வந்த நிலையில் சின்ன நம்பர் நடிகைக்கும் இதே பிரச்சனை இருக்கிறது என்ற ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

பல வருடங்களாக சினிமாவில் அதே அழகு மற்றும் இளமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும் சின்ன நம்பர் நடிகை தற்போது 40 வயதை தொட இருக்கிறார். ஆனாலும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இது பற்றி கேட்டால் எனக்காக பிறந்திருப்பவர் என்னை தேடி வரும் வரையில் நான் காத்திருப்பேன் என்று வியாக்கியானம் பேசுகிறார்.

ஆனால் உண்மையில் பெரிய நம்பர் நடிகைக்கு இருக்கும் அதே பிரச்சனை தான் இவருக்கும் இருக்கிறதாம். உடலை சிக்கென்று வைத்துக் கொள்வதற்காக தேவையில்லாத மருந்துகளை சாப்பிட்டதின் பலனைத் தான் அவர் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம்.

அதனால்தான் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருடைய திருமணம் நின்று போனது என்று பலரும் கிசுகிசுக்கின்றனர்.

அதை மறைக்கத்தான் நடிகை தற்போது முரட்டு சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் சினிமாவில் கவனம் செலுத்துவதும் அதனால் தானாம்.

அவருடைய இந்த பிரச்சினையை பற்றி தெரிந்த ஒரு நபர் காதலுடன் அவரை திருமணம் செய்ய சம்மதித்தால் உடனே நடிகை சினிமாவை விட்டு விலகி செட்டில் ஆகும் முடிவில் இருக்கிறாராம்.