பிரபல நடிகை ஒருவர் நடிக்க வந்த புதிதில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி இடத்திற்கு வந்தார். ஆனால் சில வருடங்களிலேயே புது நடிகைகளின் வரவால் அவருக்கான மார்க்கெட் முற்றிலும் குறைந்து போனது. இதனால் அவர் மிகப்பெரிய டைரக்டர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டு நாசுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி இருக்கிறார். நடிகையும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த இயக்குனர் வாய்ப்பு கொடுக்காமல் நாட்களை கடத்திக் கொண்டே சென்றாராம்.
இதனால் கடுப்பான நடிகை அவரிடம் சண்டை போட்டிருக்கிறார். உடனே அவர் தன் மகன் நடிக்கும் படத்தில் உனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறி சமாதானப்படுத்தி இருக்கிறார். அப்போது அந்த இயக்குனரின் மகன் முன்னணி நடிகராக பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் தன் மகன் நடிக்கும் ஒரு படத்தில் இந்த நடிகைக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார்.
இதை கேள்விப்பட்ட மகன் கடுப்பாகி இருக்கிறார். ஏனென்றால் அவரின் சிபாரிசு காரணமாகவே இந்த நடிகைக்கு கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக ஒரு கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் நடிகர் படத்தை முடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் எடிட்டிங் வரும் போது நடிகை நடித்த சில காட்சிகளை தவிர மற்ற அனைத்தையும் கட் செய்ய சொல்லி இருக்கிறார்.
இதனால் படம் வெளிவந்தால் தனக்கு மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நடிகைக்கு ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இது அவருக்கு ஒரு பெரிய அவமானமாகவும் இருந்திருக்கிறது. அதன் பிறகு நடிகை துண்டு, துக்கடா கேரக்டரில் நடித்து காலத்தை ஓட்டி வந்தார். இப்போது அவருக்கு சுத்தமாக வாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டார்.