தென்னாட்டுப் பேரழகி என வர்ணிக்கப்பட்ட கோலிவுட் கிளாமர் குயின் தன்னுடைய கவர்ச்சி நடனத்தினாலும் கொஞ்சும் பேச்சினாலும் இளசுகளை கட்டிப்போட்டு வைத்திருந்தார். நிறைய படங்கள் இவர் நடித்திருப்பதினாலேயே சூப்பர் ஹிட் ஆனது. இவருக்கு மவுசு தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், ஏராளமான படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் சினிமாவில் பீக்கில் இருந்த போது தனது வீட்டில் தூக்கில் தொங்கிய படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆனால் இவரை தற்கொலைக்குத் தூண்டியது அவருடைய டாக்டர் கணவர்தான். அவர்தான் அந்த நடிகைக்கு போதை ஊசி போட்டு, போதைக்கு அடிமையாக்கினார்.
ஹாலிவுட் நடிகை போல் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த அந்த கிளாமர் குயின் வெள்ளந்தியான பொண்ணு. அவருடைய சித்தி, அத்தை என இரண்டு மூன்று பெண்கள் அவரிடம் இருந்து எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டனர். இவருடைய கண்களே ஆயிரம் கதை சொல்லும். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பார்.
ஆரம்பத்தில் கவர்ச்சியில் அறிமுகமானதால் கவர்ச்சி நடிகையாக நடித்தார். 40 படங்களில் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தை இவர் நாளே படத்தில் நடனம் ஆடி சம்பாதித்து விடுவார். இவரை சினிமாவில் பயன்படுத்திய நடிகர்களின் லிஸ்டை போட்டால் நீண்டு கொண்டு இருக்கும்.
சினிமாவில் சில விஷயங்களை இழந்து தான் சில விஷயங்களை பெற வேண்டும் என்பதை வெகு சீக்கிரமே புரிந்து கொண்ட இந்த கிளாமர் குயின், கணவரின் சதி திட்டத்தால் தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொண்டார். இவருடைய மரணம் இன்றும் அவருடைய ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.