டாப் ஹீரோவின் படத்தில் விலை மாதுவாக வந்த வாய்ப்பு.. மறுத்ததால் சீரியலுக்கு தள்ளப்பட்ட ஐட்டம் நடிகை

பெரும்பாலான நடிகைகள் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதால் மிகக் குறுகிய காலத்திலேயே மார்க்கெட்டை இழந்து சினிமாவை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் தான் தற்போது உள்ள நடிகைகள் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் ஒரு நடிகை ஆரம்பத்தில் சினிமாவில் என்டரி கொடுத்து இரண்டு மூன்று படங்களில் சைடு கேரக்டர்களில் நடித்து வந்தார். அந்தச் சமயத்தில் டாப் நடிகர் ஒருவரின் படத்தில் விலைமாதுவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது தனக்கு மார்க்கெட் இல்லாத சூழ்நிலையில் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்தால் அவ்வளவு தான் என நடிகை மறுத்துவிட்டார்.

அதன் பின்பு அதே கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடித்துள்ளார். படம் வெளியான பிறகு தான் இந்தக் கதாபாத்திரத்தை தவற விட்டு விட்டோமே என மிகவும் அந்த நடிகை வருந்தி உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடித்திருந்தால் வெள்ளித்திரையில் அடுத்தடுத்த பட வாய்ப்பு குவிந்து இருக்கும்.

அவரது துரதிஷ்டத்தால் சின்னத்திரைக்கு தள்ளப்பட்டார். அங்கும் அவருக்கு கிடைத்ததெல்லாம் வில்லி கதாபாத்திரம் தான். ஆனாலும் அந்த கேரக்டரையும் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் வெள்ளித்திரையில் உள்ள நடிகைகளின் பெயரை வைத்து அவரை ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.

இந்நிலையில் வெளித்திரையில் காட்டத் தயங்கிய கவர்ச்சியை சின்னத்திரையில் வந்த பிறகு தாராளமாக காட்ட ஆரம்பித்தார். அதனால் தான் சின்னத்திரையில் ஐட்டம் நடிகை என்ற அளவுக்கு அவர் பெயர் பெற்றார். இதை அவர் அப்போதே செய்திருந்தால் வெள்ளித்திரையிலும் தனக்கான முத்திரையை பதித்திருப்பார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →