சின்னத்திரை நடிகை ஒருவர் எல்லோருடனுமே கலகலப்பாக பேசக்கூடியவர். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் இப்போது பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். அதாவது நடிகை சில வருடங்களுக்கு முன்பு தனது தொலைக்காட்சியில் வேலை பார்த்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்த நிலையில் சில வருடங்கள் மகிழ்ச்சியாக சென்றனர். பொதுவாகவே சினிமா பிரபலங்கள் பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது வழக்கமாகத் தான் இருந்து வருகிறது. அதேபோல் தான் நடிகையும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறார் என்று கூறப்பட்டது.
மேலும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லோரும் வீட்டுல விசேஷம் இல்லையா என்று கேட்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சின்னத்திரை நடிகை மருத்துவரை ஆலோசனை செய்தபோது அவருக்கு எந்த பிரச்சனை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கணவரிடம் தான் பிரச்சனை இருப்பதை தெரிந்து அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தனர். இந்நிலையில் கணவரின் குடும்பத்தில் இருந்து நடிகைக்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கணவருக்காக பொறுத்துக் கொண்ட நிலையில் ஒரு கட்டத்தில் அவரே நடிகையை திட்ட ஆரம்பித்து விட்டார்.
இவ்வளவு நாள் இதற்காகவா பொறுத்துக் கொண்டோம் என்று நினைத்து அவரைப் பிரிந்து சின்னத்திரை நடிகர் தனது அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாராம். அதோடு விரைவில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிய இருக்கிறாராம்.