Gossip: அக்காவால வெளில தல காட்ட முடியல.. இப்ப தங்கச்சி வேறயா, நொந்து போன இயக்குனர்

Gossip: பிரபல இயக்குனர் திடீரென புது அவதாரம் எடுத்ததிலிருந்து அவருடைய பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. அதிலும் வாரிசு நடிகையின் காதல் முறிவுக்கு இவர்தான் காரணம் என்ற சர்ச்சையும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இருவரும் படு நெருக்கமாக நடித்தது தான் இதற்கு காரணம். இயக்குனர் வீட்டிலும் கூட பஞ்சாயத்து நடந்திருக்கிறது. அதனாலேயே அவர் இப்போது உச்ச நடிகர் படத்தில் படு பிசியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தங்கை நடிகையும் பதிலுக்கு இயக்குனரை டார்ச்சர் செய்து வருகிறாராம். இவர் ஆரம்பிக்கும் ப்ராஜெக்ட்டிலும் இயக்குனர் நடிக்க வேண்டும் என ஒரே அன்பு தொல்லையாம்.

இதனால் பாவம் அவர் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அக்காவால் ஆரம்பித்த பிரச்சனையே இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இயக்குனர் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு இருக்கிறார். இதில் தங்கை வேற தன் பங்குக்கு டார்ச்சர் செய்து வருகிறாராம். ஆனாலும் அவர் புத்திசாலியாக இதை சமாளித்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →