நரம்பில்லாமல் பேசும் நாக்கு.. நடிகரை கட்டம் கட்டும் விஷமிகள்

Gossip: கடந்த சில வருடங்களாகவே அந்த நடிகரை எப்படியாவது ஓரம் கட்டி விட வேண்டும் என சிலர் தீயா வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அதனாலேயே அவர் என்னதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் கூட அவருடைய படங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை.

அதேபோல் நெகட்டிவ் விமர்சனங்களை வேண்டுமென்றே கொடுக்கும் வேலையையும் சிலர் பக்காவாக செய்து வருகின்றனர். அதேபோல் சோசியல் மீடியா சேனல்களில் கூட நடிகரை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி நடிகரும் அவருடைய குடும்பமும் ஒரு நல்ல விஷயத்தை வருடக்கணக்காக செய்து வருகின்றனர். அதையும் கூட தவறாக சித்தரிக்கும் சில இணைய கூலி படையும் இருக்கிறது.

நடிகரை கட்டம் கட்டும் விஷமிகள்

இதற்கு முக்கிய காரணம் நடிகரின் குடும்பம் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பது தான். அப்பா பெயரை காப்பாற்றுவது போல் நடிகர் நடந்து கொள்வதும் இந்த தேவையில்லாத பேச்சுக்கு காரணமாக இருக்கிறது.

ஆனால் நடிகரோ அவருடைய குடும்பமோ இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்வதில்லை. சமீபத்தில் நடந்த விழாவில் கூட அவர் பெருந்தன்மையாக பல விஷயங்கள் பற்றி பேசினார்.

தற்போது அதை கூட நெகட்டிவ் ஆக பார்க்கின்றனர். ஆனால் நடிகர் தன்னுடைய இலக்கை நோக்கி செல்வதில் தான் குறியாக இருக்கிறார். இதை எல்லாம் அவர் காதில் கூட வாங்க மாட்டார் என்கிறது திரையுலாக வட்டாரம்.