Gossip: கடந்த சில நாட்களாக கோடம்பாக்க வட்டாரமே கிடுகிடுத்துப் போய் இருக்கிறது. அந்த ஃபிளவர் நடிகர் கைது விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த நடிகர் அப்பாவி அவரை வைத்து வேறு சில திட்டங்களும் நடக்கிறதாம். எல்லாம் பெரிய இடத்து விவகாரம் என்கின்றனர். இதில் காவல்துறையின் சந்தேக வட்டத்தில் பல பிரபலங்கள் இருக்கின்றனர்.
ஆனால் யாரை மாட்டி விட வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்த பெரும்புள்ளி தான். தனக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்ற அப்பாவி பிரபலங்கள் எப்போது வேண்டுமானாலும் மாட்டலாம் என்ற அதிர்ச்சி தகவல்களும் கசிந்துள்ளது.
அதில் ஒரு முக்கிய பிரபலத்தை சிக்க வைக்கும் வேலையும் நடந்து வருகிறது. அவர் மாட்ட வேண்டும் என்றால் முதலில் மூன்றெழுத்து நடிகைக்கு தான் செக் வைப்பார்களாம்.
மூன்றெழுத்து நடிகையின் சட்டவிரோத பிசினஸ்
ஏனென்றால் இந்த தடை செய்யப்பட்ட மருந்து விவகாரத்தில் அந்த நடிகை தான் பெரிய டீலர். அவரை விசாரித்தாலோ அல்லது அவர் வீட்டில் சோதனை போட்டாலோ பல விஷயங்கள் கிடைக்கும்.
அதை வைத்து அந்த முக்கிய பிரபலத்தை கூட சிக்கலில் சிக்க வைத்து விடலாம். ஆனால் இடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திடீரென நடிகை காப்பாற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனாலும் வருங்காலத்தில் அரசியலில் முக்கிய இடத்தை பிடிக்க போகும் அந்த நபருக்கு இவர் நெருக்கமானவர். அதனாலேயே மூன்றெழுத்து நடிகை பக்கம் இந்த விவகாரம் திரும்பி இருக்கிறது.
அவர் வாயை திறந்தால் பல ரகசியங்கள் வெளிவரும். அதே போல் இந்த விவகாரத்தில் மெயின் நபர் யார் என்பதும் வந்துவிடும். அதை வைத்து இந்த கேஸ் முடியும் என அந்த சர்ச்சை பிரபலம் கொளுத்தி போட்டுள்ளார்.
இது தற்போது பகீர் கிளப்பி இருக்கும் நிலையில் எப்போது மாட்டுவோமோ என பல பிரபலங்கள் பயத்தில் இருக்கிறார்களாம்.