பாக்க தான் ரசகுல்லா வாயை திறந்தா படு லோக்கல்.. நடிகையால் திக்கு முக்காடிய தயாரிப்பாளர்

Gossip: அந்த மூன்றெழுத்து இளம் நடிகை சமீபத்தில் சாக்லேட் பாய் நடிகருடன் ஒரு படத்தில் போட்ட ஆட்டம் கோலிவுட் வரை பட்டையை கிளப்பியது. அதனாலேயே நடிகையை தங்களுக்கு ஜோடியாக கமிட் செய்ய பல நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அதில் டிவி நடிகருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவருடைய அடுத்த படத்தில் நடிகை நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட அது உறுதியான நிலையில் அவரை கமிட் செய்யலாமா என தயாரிப்பாளர் யோசனையில் இருக்கிறாராம்.

இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடிகை செய்த அலப்பறை தான். அக்கட தேச ஹீரோ நடித்து வெற்றி பெற்ற பான் இந்தியா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் பிரமோஷனில் நடிகர் பிஸியாக உள்ளார்.

அந்தப் படத்தில் இந்த நடிகையும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அதனால் இவரை வைத்தே ப்ரோமோஷனை சூடு பிடிக்க வைக்கலாம் என நடிகர் ஒரு பிளான் போட்டிருக்கிறார். அதன்படி ஹீரோயின் உடன் இந்த நடிகையும் விழாவில் கலந்து கொண்டார்.

நடிகையால் திக்கு முக்காடிய தயாரிப்பாளர்

ஆனால் அதற்காக ஆன செலவு மட்டும் 40 லட்சத்தை தாண்டி இருக்கிறது. அது மட்டுமா தாங்கும் இடம் சாப்பாடு என நடிகை ரொம்பவும் பந்தா காட்டி இருக்கிறார்.

இதில் நிகழ்ச்சி முடிந்து அவர் குடிப்பதற்கு கேட்ட சமாச்சாரம் இல்லாததால் உதவியாளரை காதில் கேட்க முடியாத அளவுக்கு அர்ச்சனை செய்திருக்கிறார். இதனால்தான் கோலிவுட் படத்தில் அவரை கமிட் செய்யப் போகும் தயாரிப்பாளர் இப்போது வேறு ஹீரோயினை பிடிக்கலாமா? என ஆலோசித்து வருகிறாராம்.

Leave a Comment