தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து இன்று பெரிய அந்தஸ்தில் இருக்கும் நடிகை ஒருவர் கடந்த காலத்தில் செய்த பாவத்தால் தற்போது அனுபவித்து வரும் துயர் சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழ் சினிமாவில் நம்பர் நாயகியாக வலம் வரும் இவர், சர்ச்சைகளில் சிக்காத நாட்களே கிடையாது எனலாம். இவர் வந்த கொஞ்ச காலத்திலேயே கவர்ச்சி நடிகை, ஐட்டம் நடிகை என்ற பெயரை வாங்கியவர்.
இதன் காரணமாக இவருக்கு காதலர்கள் லிஸ்ட் அதிகம் எனலாம். பிரபல நடிகர் முதல் இயக்குனர் வரை காதலித்தவர். இவர் தற்போது முன்னாள் காதலருக்கு செய்த பாவத்தால் பல பிரச்சனைகளை அண்மைக்காலமாக அனுபவித்து வருகிறார். பல வருடங்களாக அவர் கவர்ச்சி நாயகியாக நடித்து வந்த நிலையில், திடீரென பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்தே படங்களை தேர்வு செய்து நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார்.
இப்போது இவருக்கு இருந்த மார்க்கெட் சற்று குறைந்து வருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் சென்று தன்னை மீண்டும் பிரபலப்படுத்த முயன்று வருகிறார். இதெல்லாம் செய்தும் அவர் செய்த பாவம் அவரை துரத்திக்கொண்டே வருகிறது. தனது முன்னாள் காதலனுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பது தெரிந்தும், அவரை திருமணம் செய்யும் அளவிற்கு சென்றார் அந்த நடிகை.
மேலும் 16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியையும், அந்த நடிகையின் பேச்சைக்கேட்டு அவர் விவாகரத்து செய்தார். இதுபோதாது என முன்னாள் காதலனின் பிள்ளைகளிடமிருந்தும் பிரிக்க முற்பட்டார் அந்த நடிகை. ஆனால் முன்னாள் காதலனோ, தனது பிள்ளைகளை பிரிய மனம் இல்லாமல், அந்த நடிகையிடம் எதிர்த்து பேச, கடுப்பான அந்த நடிகை அவரை அப்படியே கழட்டி விட்டார்.
அன்று அவர் செய்த பாவம் தான் இன்று அவருக்கு பிள்ளை பாக்கியம் கூட இல்லாமல் உள்ளது. மேலும் அந்த நடிகரின் முன்னாள் மனைவி அந்த நடிகையின் முகத்திற்கு முன் மண்ணை அள்ளி வீசி விட்ட சாபம் தான் இன்று அவருக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. தற்போது நம்பர் நடிகை செய்த பாவம் அவரை மட்டுமில்லாமல், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பழிவாங்கி வருகிறது.
இன்னொரு குடும்பத்தை பிரித்தால் நம் குடும்பம் அதற்கு மேலாக பாவத்தை சம்பாரிக்கும் என்பதை நம்பர் நடிகையின் வாழ்க்கை மூலமாக நம் அனைவருக்கும் பாடமாக உள்ளது. இனி இந்த நடிகை நடிப்பை எல்லாம் மூட்டைகட்டி விட்டு குடும்பத்தை சரி செய்யும் வேலையை ஆரம்பித்து, தான் செய்த பாவத்திற்கு விமோச்சனம் செய்வதுதான் சரியானது.