Gossip: நம்பர் ஒன் நடிகர் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் கூட வருடத்திற்கு ஒரு படம்தான் நடிக்கின்றனர். ஆனால் இந்த நடிகரோ ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்தால் உடனே அடுத்த பட சூட்டிங் சென்று விடுகிறார்.
அந்த அளவுக்கு பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் நடித்துள்ள அந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரிய அளவில் வசூல் செய்ய வேண்டும் என தயாரிப்பாளரை காட்டிலும் நடிகரின் ரசிகர்களுக்கு தான் ஆசை அதிகமாக இருக்கிறது.
அதனாலயே சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் டிக்கெட் எடுத்து கொடுத்து முதல் நாளில் தியேட்டரை அதிர வைக்க பிளான் செய்துள்ளனர். அதற்கேற்றார் போல் டிக்கெட்டுகள் பிளாக்கில் பல ஆயிரங்களுக்கு விற்கப்படும் நிலையும் இருக்கிறது.
நடிகரை காலி செய்ய இறங்கிய கும்பல்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க டிக்கெட் புக்கிங் எப்படி இருந்தால் என்ன. படம் ஆயிரம் கோடி வசூல் எல்லாம் நடக்கவே நடக்காது என இன்னொரு நடிகரின் ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அது ஃப்ளாப் என பேச ஆரம்பித்து விட்டனர்.
அதேபோல் ரிலீஸ் நாளன்று நெகட்டிவ் விமர்சனங்களை இறக்குவதற்கும் தயார் நிலையில் இருக்கின்றனர். ஏற்கனவே இந்த நடிகரின் படங்கள் வரும்போது இந்த வேலையைத்தான் அவர்கள் பார்த்தார்கள்.
தற்போது இந்த படத்தை காலி செய்ய வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் படம் தரமாக இருக்கும். அதனால் இந்த பாட்சா பலிக்காது என ஒரு குரூப் பேசி வருகிறது.