Gossip: அந்த பிரபல நடிகர் பற்றி எல்லோர் மனதிலும் நல்ல எண்ணம் தான். அவர் உத்தமர் வல்லவர் என பெருமையாக கூறுவார்கள்.
ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவர் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். காதல் பிரேக் அப், மற்றொரு நடிகையுடன் காதல், திருமணம் என அவர் விஷயம் ஊர் அறிந்தது தான்.
ஆனால் தற்போது அவருடைய பழைய விஷயத்தை கிளறி ஒரு கூட்டம் குளிர் காய்ந்து வருகிறது. அதில் நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் இரண்டு எழுத்து நடிகை உடன் காதலில் இருந்தார்.
எல்லார் முன்னாடியும் நடிகர் செய்த வேலை
இருவரும் ஈருடல் ஓர் உயிர் என காதலை வளர்த்தனர். அந்த நடிகை அப்போது கேரியரின் உச்சத்தில் இருந்தார். அவர் தயவில் நடிகருக்கும் சில பல வாய்ப்புகள் கிடைத்தது.
அதைப் பிடித்து தான் நடிகர் இன்று முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். ஆனால் இடையில் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதற்கு முன்பாக நடிகர் காதலியின் பின்னால் சுற்றியதெல்லாம் தனி கதை.
ஒருமுறை தன் காதலியை அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர சொல்லி இருக்கிறார். ஒரு ஷாட் முடிந்ததும் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் அனைவரும் நடிகையை கட்டிப்பிடித்த படி நின்றிருந்தாராம்.
இதைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் கூச்சப்பட்டு இடத்தை காலி செய்து இருக்கின்றனர். அதேபோல் மணி கணக்கில் லவ் லெட்டர் எழுதுவது என தீரா காதலில் இருந்துள்ளார்.
ஆனால் திடீரென காதலியை பிரிந்தார். இதற்கு இன்னொரு நடிகர் காரணம் என்கின்றனர். அதன் பிறகு சூட்டோடு சூடாக சக நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அந்த நடிகர்.