தேவையில்லாமல் குறுக்க மறுக்க ஓடும் ஹீரோ.. எல்லாம் அந்த நடிகரை கவுக்க தான்

Gossip: தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் அந்த ஹீரோ சமீப காலமாக சோசியல் மீடியாவில் அதிகம் தென்படுகிறார்.

அதிலும் இவர் ஏன் இதெல்லாம் செய்கிறார் என நினைக்கும் அளவுக்கு இருக்கிறது அவரின் நடவடிக்கை. இதை நெட்டிசன்கள் கூட இவர் ஏன் குறுக்க மறுக்க ஓடுறாரு என கலாய்த்து வருகின்றனர்.

எல்லாம் அந்த நடிகரை கவுக்க தான்

அதிலும் உச்ச நடிகர் ரேஞ்சுக்கு அவர் செய்த அலப்பறை தான் இப்போது கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. ஒரு படம் பெரிய அளவில் ஹிட்டானதுமே இவருக்கு தலைகனம் அதிகமாயிடுச்சு.

அதிலும் அந்த பெரிய புள்ளியுடன் ஏற்பட்ட நெருக்கம் தான் இவரை இப்படி மாற்றி விட்டது என்கின்றனர். அதேபோல் பிரபல ஹீரோவை காலி செய்ய இவரை பயன்படுத்துகிறதாம் பெரிய இடம்.

நடிகரும் அதற்கு தலையாட்டி பொம்மை போல் இருக்கிறார் என ஒரு சலசலப்பு இருக்கிறது. ஆனால் எல்லாமே கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

இப்படியே போனால் நடிகர் பல சர்ச்சையில் சிக்குவார். சூதானமாக இருந்து கொண்டால் கெரியருக்கு ஆப்பு இருக்காது என கோடம்பாக்கம் வட்டாரத்தில் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.