அழகை பாதுகாக்க வில்லங்க சர்ஜரி.. வெளியான வீடியோவால் அதிர்ச்சியில் உறைந்த நடிகை

Gossip: இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளின் டார்கெட் வெள்ளி திரையாக தான் இருக்கிறது. அப்படி ஜம்பாகி வந்தவர்கள் பல பேர் சினிமாவில் ஜொலிக்கின்றனர்.

அதேபோன்ற ஆசையில் பாலிவுட் பக்கம் அடியெடுத்து வைத்திருக்கிறார் அந்த இளம் நடிகை. அவருடைய முதல் படம் கவனம் பெற்ற நிலையில் கடந்த வருடம் மூத்த நடிகருக்கு ஜோடியாக நடித்தார்.

பிரைட் நடிகர் தயாரிப்பில் வெளிவந்த படம் பெரிய அளவில் போகவில்லை. இருந்தாலும் நடிகைக்கு இப்போது வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அழகை பாதுகாக்க வில்லங்க சர்ஜரி

இந்த சூழலில் கடந்த சில தினங்களாக நடிகை பற்றிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அவர் அழகுக்காக சர்ஜரி செய்து கொண்டதாகவும் அதனால் இப்படி ஆகிவிட்டார் என ஒரு வீடியோ பரவியது.

சீரியலில் இருக்கும் போது பார்த்ததைவிட நடிகை இப்போது மொத்தமாக மாறிப் போய்விட்டாரே என இணையவாசிகளும் அதை வேகமாக ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த நடிகர் தற்போது அது தான் இல்லை என புலம்பாத குறையாக சொல்லி வருகிறார். ஏற்கனவே கிரஷ் நடிகை போல் ஒரு ஏ ஐ வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

அந்த வரிசையில் இந்த நடிகையும் சிக்கிவிட்டார். இந்த டெக்னாலஜியால் இன்னும் யார் யார் சிக்க போகிறார்களோ தெரியவில்லை.