பல பேரோட ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்.. கூச்சமே இல்லாமல் அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்ட 34 வயது நடிகை

Gossip: சமீபத்தில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஒருவர், அந்தரங்க விஷயத்தைப் பற்றி அசால்டாக பேசியிருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் டாப் ஹீரோவின் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்து, அதன் பின் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் அசால்டாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிக்கும் கேரக்டரெல்லாம் பல முன்னணி நடிகைகளை நடிக்க முடியாது என தூக்கி எறிந்தவை தான். ஆனால் அந்தப் படங்களில் எல்லாம் இந்த நடிகை அசால்டாக நடித்து தன்னை யார் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் அளித்த பேட்டியில் ஸ்கூல் படிக்கும்போதே காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அதுலயும் பக்கத்து ஸ்கூல் பசங்கள சைட் அடிக்க, அந்த ஏரியாவுல தான் பிஸ்கட், சாக்லேட் எல்லாம் நல்லா இருக்கும்னு போயிட்டு வருவேன். ஆனா ரெண்டு மாதத்திலேயே அந்த நடிகையின் முதல் காதல் பிரேக்கப் ஆயிடுச்சு. அதன்பின் நிறைய பேர காதலிச்சுருக்கேன். நிறைய ரிலேஷன்ஷிப்பிலும் இருந்து, அது பிரேக்கப் ஆகி இருக்கிறது. பலருடன் உறவுல இருந்து பிரிந்ததை வெளிய சொல்றதுக்கு எதற்கு கூச்சப்படணும்.

காதலில் முக்கியமானதை டார்ச்சர் பண்ண கூடாது. ஒருத்தர பிடிக்கலைனா அவங்கள விட்டு விலகி போயிறணும். நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்களுள் சிலர் என்னை டார்ச்சர் செய்துள்ளனர். அவங்க மட்டுமல்ல நானும் சிலரை டார்ச்சர் செய்ததன் விளைவு தான் பல பிரிவுக்கு காரணம் என்று 34 வயதாகும் அந்த இளம் நடிகை ஓபனாகவே எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டார்.

இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நடிகையோட பேட்டியை கேட்ட பிறகு பல ஹீரோயின்கள், ‘என்னப்பா! இந்த பொண்ணு இவ்வளவு ஓபனா பேசுறாரே’ என்று வாயடைத்து போய்விட்டனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →