Gossip: நடிக்க வந்த புதுசில் அந்த உயர்ந்த நடிகை கைநிறைய படங்களை வைத்திருந்தார். அதே போல் மற்ற நடிகைகளை போல் இல்லாமல் அமைதியாக தான் இருந்தார்.
ஆனால் போகப் போக நடிகையின் அட்ராசிட்டி அதிகரித்தது. அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இருந்தாலும் அம்மணி வாய்ப்புகளை விடாமல் நடித்து வந்தார். ஆனால் இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.
வெட்டி சீன் போட்டு மூக்கடைப்பட்ட நடிகை
எக்ஸ்பிரஷன் வரல டான்ஸ் வரல என நடிகையின் மீது விமர்சனங்கள் இருந்தது. ஆனாலும் கடந்த வருடம் அவர் கையில் கணிசமான படங்கள் இருந்தது
ஆனால் இந்த வருடம் அவர் நடிப்பில் எந்த படங்களும் வரவில்லை. விசாரித்ததில் நடிகை போட்ட ஓவர் சீன் தான் அவருக்கு ஆப்பாக முடிந்து விட்டதாம்.
இதனால் மனது உடைந்து போன நடிகை 6 மணி ஆனால் புது அவதாரத்தில் இறங்கி விடுகிறாராம். அது மட்டும் இன்றி நட்பு வட்டாரத்தில் இருக்கும் இயக்குனர்கள் ஹீரோக்கள் எல்லோருக்கும் போன் செய்து வாய்ப்பு கேட்டு நச்சரித்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.
இதனால் கவலையில் இருக்கும் நடிகையின் நட்பு வட்டாரம் பழையபடி அவரை மாற்றுவதற்கு முயற்சித்து வருவதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.