Gossip: பல திறமைகள் கொண்ட அந்த இளம் நடிகர் முதல் படத்திலயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஏற்கனவே பரிச்சயமான முகம் என்பதால் அவருக்கு வரவேற்பும் அதிகமாக கிடைத்தது.
ஆனால் மற்ற ஹீரோக்களை போல் அடுத்தடுத்த வாய்ப்புகளை அவர் தேடவில்லை. தன் மனதுக்கு பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே சம்மதிப்பார்.
அதனாலேயே அவர் அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவர் நடித்த படங்கள் அத்தனையுமே ஹிட்டு தான்.
பொறாமையில் வாய்ப்பை தட்டிவிட்ட ஹீரோ
ஆனால் திடீரென அவர் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார். இதற்கு முக்கிய காரணம் சினிமா துறையில் அவர் அனுபவித்த சங்கடங்கள் தான்.
அதிலும் இப்போது முன்னணியில் இருக்கும் அந்த ஹீரோ படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். தயாரிப்பாளரே விரும்பி கேட்டு இவரை கமிட் செய்திருக்கிறார்.
ஆனால் அந்த ஹீரோ இவருடைய வளர்ச்சியால் பொறாமை பட்டு அந்த வாய்ப்பை தட்டி விட்டிருக்கிறார். இதனால் உடைந்து போன நடிகர் தனக்கான வாய்ப்புகளுக்காக காத்திருந்தாராம்.
ஆனாலும் இவரை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது ஒரு கூட்டம். இதனால் தற்போது நடிப்பும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம் என அவர் ஒதுங்கி விட்டார்.
அது மட்டும் இன்றி தனக்கான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர் எங்கிருக்கிறார் என்று கூட தெரியவில்லை. ஆனாலும் மீண்டும் இவர் கம் பேக் கொடுத்தால் அவரை தலையில் தூக்கி வைத்து ஆட ரசிகர்கள் தயாராக உள்ளனர்.