சோசியல் மீடியாவில் கொஞ்சம் பிரபலமாகி விட்டாலே அவர்களின் அடுத்த இலக்கு சினிமாவாகத்தான் இருக்கும். அப்படி சோசியல் மீடியாக்கள் மூலம் சினிமாத்துறைக்கு என்ட்ரி கொடுத்த ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சினிமா ஆசையால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து ஏமாந்துள்ளார் ஒரு டிக் டாக் பிரபலம்.
டிக் டாக் செயலியின் மூலம் அரைகுறை ஆடையில், இரட்டை அர்த்த வசனங்களை பேசி பிரபலமானவர்தான் அந்த அம்மணி. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கேவலமான வீடியோக்களை போட்டு அவர் ஏகப்பட்ட லைக்குகளை வாங்கி குவித்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமான அவர் கடந்த வருடம் பிரபல காமெடி நடிகரின் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த இவருக்கு ஒரு இயக்குனர் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார். மேலும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதெல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம் என்ற ரேஞ்சில் அந்த டிக் டாக் கவர்ச்சி புயலும் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு சம்மதித்திருக்கிறார்.
ஆனால் அங்கு தான் ஒரு டிவிஸ்ட் நடந்து இருக்கிறது. என்னவென்றால் பட வாய்ப்பு தருவதாக கூறி அம்மணியை நன்றாக யூஸ் செய்து கொண்ட அந்த இயக்குனர் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் தரவில்லையாம். எத்தனை முறை அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை என்று தற்போது அவர் நொந்து போயிருக்கிறார்.
ஏற்கனவே திரைத்துறையில் ஒரு நடிகை சினிமா ஆசையால் மோசம் போன கதை பலருக்கும் தெரியும். நியாயம் கேட்கிறேன் என்று அவர் பல பிரபலங்களின் முகத்திரையையும் கிழித்தார். அந்த ரீதியில் தற்போது இந்த டிக் டாக் பிரபலமும் களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவர் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் அதிக பிரபலமாக இருக்கும் பல பெண்களும் சினிமா ஆசையால் ஏமாந்து போயிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் மட்டும் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை தற்போது வெளியே கூற ஆரம்பித்துள்ளனர்.