கல்யாண வீட்டில் நடந்த சரக்கு பார்ட்டி.. பாய் பிரண்டுடன் கும்மாளம் போட்ட நடிகை

அந்த தொழிலதிபர் வீட்டு கல்யாண நிகழ்வு தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை அவர் நடத்தி ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.

திருமணத்திற்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும் அதற்கு முன்பே கோலாகலமாக அரங்கேறிய இந்த பங்க்ஷனில் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிலும் பல ஹீரோக்கள் முக்கியமான ஷூட்டிங்கை கூட கேன்சல் செய்து விட்டு ஓடி வந்தார்களாம்.

அவர்களை எல்லாம் சிறப்பாக கவனிக்க தொழிலதிபர் பலத்த ஏற்பாடு செய்திருக்கிறார். அனைவருக்கும் தனித்தனியாக சொகுசு விடுதி என அமர்க்களம் செய்துவிட்டாராம். அது மட்டுமல்லாமல் பார்ட்டியும் வேற லெவலில் இருக்கிறது.

பல இளம் நடிகைகளும் ஜோடியாக அதில் கலந்து கொண்ட நிலையில் வாரிசு நடிகையும் தன் பாய் பிரண்டுடன் வந்திருக்கிறார். விடிய விடிய குடித்து கும்மாளம் போட்ட நடிகை தன் காதலருடன் தனி ரூமுக்கு சென்று விட்டாராம்.

நடிகையின் உடன் வந்திருந்த அப்பாவும் தங்கையும் வேறு அறைகளில் தங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே வாரிசு நடிகையின் காதல் சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த கல்யாணத்தின் மூலம் அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறது பாலிவுட் வட்டாரம்.