விஜய் டிவியின் முக்கியமான பிரபலம் தான் இவர். தொலைக்காட்சி மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். திருமண வயதை தாண்டியும் சின்ன பிள்ளை போல் சுற்றி வந்த இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் அவருடைய நண்பர் ஒருவருடன் திருமணம் நடந்தது. மொத்த திரையுலகமும் வாழ்த்த ரொம்ப கிராண்டாக அந்த திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் எந்த மீடியாவிலும் தன்னுடைய முகத்தை காட்டாமல் ரொம்பவும் அடக்கமாக கொஞ்ச நாள் குடும்பம் நடத்தினார். அதன் பின்னர் கணவரால் தன்னுடைய சுதந்திரம் பறிபோவதாக கூறி மூட்டை முடிச்சுகளை கட்டி கொண்டு சென்னை வந்தடைந்தார் அம்மணி. அதன் பின்னர் மீண்டும் பழைய ஆட்டத்தை ஆரம்பித்தார்.
ஆட்டம், பாட்டம், பார்ட்டி என இழந்த சுதந்திரத்தை மீண்டும் அடைந்தது போல் ஆட ஆரம்பித்தார். ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, சினிமா பிரபலங்களுடன் பிடித்த இடத்திற்கு செல்வது என வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்துவிட்டார். இதனால் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டது.
இப்படியே போனால் நிலைமை மோசமாகிவிடும் என இவருடைய குடும்பத்தினர் கவலை பட தொடங்கிவிட்டனர். இதனால் இந்த பிரச்சனைக்கு உடனடியாக முடிவு கட்ட எண்ணியவர்கள் மாப்பிள்ளை தேட ஆரம்பித்துவிட்டனர். இப்போது இந்த நடிகையின் ஜாதகம் கேரளாவை சேர்ந்த ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஜாதகத்துடன் பொருந்துகிறதாம்.
நடிகைக்கும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போது இருக்கிறதாம். இதனால் இந்த தொழிலதிபரை வளைத்து போட நடிகையின் குடும்பத்தினர் திட்டம் போட்டு இருக்கிறார்களாம். இந்த செய்தி தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஏற்கனவே திருமணத்தால் சுதந்திரம் பறி போகிறது என அங்கிருந்து திரும்பி வந்தவர். மேலும் விவாகரத்திற்கு பிறகு கவர்ச்சியிலும் தாராளமாக இறங்கிவிட்டார். போதாத குறைக்கு ஆண் நண்பர்கள் சகவாசம் வேறு அதிகம். இந்த திருமண வாழ்க்கையில் உருப்படியாக நிலைப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.