2 வருட டேட்டிங் செய்த பின்பே திருமணம்.. வில்லன் நடிகரின் அந்தரங்க சேட்டை

முதலில் ஹீரோவாகவும் இப்போது வில்லனாகவும் மிரட்டி கொண்டிருக்கும் முரட்டு நடிகர் ஒருவர், தனது காதல் கதை மற்றும் திருமணம் குறித்து மனம் திறந்து இருக்கிறார். இந்தப் பேட்டியின் மூலம் அந்த நடிகரின் அந்தரங்க சேட்டைகள் எல்லாம் அவரது வாயாலே வெளிவந்திருச்சு.

நடிகர் தனது மனைவியை இரண்டு வருடங்களாக டேட்டிங் செய்து விட்டு தான் திருமணம் செய்தாராம். டேட்டிங் செய்த காலகட்டத்தில் காதலி தன்னுடைய வாழ்க்கைக்கு செட்டாகுவாரா என்பதை பார்த்த பின்பு தான் கல்யாணம் செய்திருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் நிறைய மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் சமீப காலமாக டாப் ஹீரோக்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்தார். இவருடைய காதல் மனைவி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் கூட.

இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க குடும்பத்தில் தான் கவனம் செலுத்தினாராம். இந்த தம்பதியருக்கு 14 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில், சமீபத்தில் இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தான் முரட்டு நடிகரின் காதல் விவகாரம் தெரிய வந்தது. அதிலும் இவர் இரண்டு வருடம் தன்னுடைய காதலியுடன் குடும்ப நடத்திவிட்டு, செட்டாகுவாரா என்று பார்த்த பிறகு தான் கல்யாணம் செய்திருப்பது கொஞ்சம் ஓவர் தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →