எக்ஸ் புருஷன் மீது பழியை தூக்கி போட்ட மனைவி.. நொண்டிக்குதிரைக்கு சறுக்குனது தான் சாக்கு

சமீபகாலமாக சினிமாதுறையில் விவாகரத்து செய்தி அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நட்சத்திர பிரபலம் விவாகரத்து செய்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. மனைவி அந்த ஹீரோ எக்ஸ் புருஷன் மீது விவாகரத்து செய்யும் போது கூட எந்த தப்பான கருத்தையும் பதிவிடவில்லை.

ஆனால் இப்போது மனைவியே புருஷன் மீது மிகப்பெரிய பழியை தூக்கி போட்டு இருக்கிறார். அதாவது நடிகை தனது கணவன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. ஆனால் அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

யூடியூப்பில் பல மில்லியன் பார்வையாளர்கள் தாண்டி சென்றது. இதனால் இந்த படத்திற்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் தற்போது மனைவி இயக்குனர் வேறு ஒரு படத்தை இயக்கி வெற்றிகொண்டு இருக்கிறார். அவருடைய முந்தைய படங்கள் தோல்விக்கான காரணத்தை கூறியிருந்தார்.

அப்போது இந்தப் படத்திற்கான தோல்விக்கு காரணம் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடல் தான் என்று கூறியிருக்கிறார். அவருடைய எக்ஸ் கணவன் பாடிய அந்த பாடல் பெரிய ஹிட் ஆனது மிகவும் ஆச்சரியமாக இருந்ததாம். இந்த பாடல் மிகுந்த அழுத்தத்தை படத்திற்கு கொடுத்துவிட்டது.

ஆகையால் தான் அந்த படம் வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது என மனைவி கூறியிருக்கிறார். படத்தை சரியாக எடுக்காமல் நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு என்பது போல மனைவி கூறியிருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல் இப்போது அவருடைய படம் ஹிட்டானதும் மாஸ் ஹீரோ நடித்ததால் தான் என்ற பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.