தேவைக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் பெண்கள்.. பணத்தை காட்டி மயக்கும் பிரபலங்கள்

சமீபகாலமாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி வெள்ளித்திரை முதல் சின்னத்திரை நடிகைகள் தைரியமாக ஊடகங்களில் பேசி வருகிறார்கள். வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் கட்டாயப்படுத்துவதாக கூறி வருகிறார்கள்.

இது பற்றி சமீபத்தில் சர்ச்சையான நடிகை ஒருவர் பேசி உள்ளார். அதாவது சினிமாவில் மட்டும் தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என்பதை ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. சாதாரணமாக வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கு கூட இந்த பிரச்சனை நடக்கிறது.

பேப்பர் போடுபவன், பால்காரன், பூ விக்கிறவன் என எல்லோருமே பெண்களை பயன்படுத்த நினைக்கிறார்கள். அவர்களை பார்வையாலே மிரட்டும் திறமையும், தைரியமும் பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் சிலர் இதை செய்வதில்லை. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கிறது.

பெண்கள் இணக்கமாக இருப்பதால் ஆண்கள் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தனது குடும்ப பிரச்சினை காரணமாக பெண்களும் ஆண்களின் அரவணைப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். சிலர் தனது கணவருடன் ஏற்படும் பிரச்சனை காரணமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

வேறு சிலர் பணரீதியாக நெருக்கடி வந்தால் வேறு வழியின்றி ஆண்களை பயன்படுத்திக் கொள்வதாக சர்ச்சை நடிகை கூறியுள்ளார். இதனால் ஒட்டுமொத்தமாக ஆண்களை மட்டும் தவறு சொல்வதில் நியாயம் இல்லை. இரண்டு பக்கமுமே தப்பு உள்ளது.

ஆனால் இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஏனென்றால் எதிரில் உள்ளவர் நல்லவரா, கெட்டவரா என்பது கூட தெரியாமல் அவர்கள் இருக்கும் சூழ்நிலையால் ஆண்கள் மீது வீழ்கிறார். இதை ஆண்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தனக்கான காரியத்தை முடித்துக் கொள்வதாக அந்த நடிகை கூறியுள்ளார்.