அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் என்று கடந்து போனாலும் ஒரு சில விஷயங்கள் பலரையும் முகம் சுளிக்க வைக்கும். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது நடந்துள்ளது. பிரபல கட்சியில் மூத்த அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர் இளம் நடிகையை படுக்கைக்கு அழைத்திருக்கும் செய்தி தற்போது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் வாழ்க்கையில் கண்ணியமான பெயர் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு பெண்கள் மீது ஆசை அதிகம். இதனாலேயே அவர் அழகாக இருக்கும் நடிகைகளை எல்லாம் தன் வலையில் வீழ்த்தி விடுவாராம். அப்படி வரும் நடிகைகளுக்கு இவர் பணம் எதுவும் கொடுக்காமல் இலவசமாகவே காரியத்தை சாதித்துக் கொள்வாராம்.
அவருடைய செல்வாக்கு அப்படி என்பதால் நடிகைகளும் பயந்து அடங்கி விடுவார்களாம். ஆனால் இளம் நடிகை ஒருவர் மட்டும் அவரிடம் இலவசமாக வர முடியாது என்று பேரம் பேசி ஒரு பெரிய தொகையை வாங்கி இருக்கிறார். டிவியை பார்த்துவிட்டு அந்த நடிகையின் மேல் ஆசைப்பட்ட அரசியல்வாதியிடம், மகள் வயது நடிகையின் மீது ஆசைப்படலாமா என அவருடைய நண்பர்கள் கூட்டம் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
ஆனாலும் ஆசை அடங்காத அவர் பிடிவாதமாக இருந்து காரியத்தை சாதித்து இருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நடிகையோ அவர் யாராக வேணாலும் இருக்கட்டும் எனக்கு காசு தான் முக்கியம். சும்மா வர முடியாது என்று கராராக கூறியிருக்கிறார்.
இத்தனைக்கும் அந்த நடிகை பெரிய ஹீரோயின் எல்லாம் கிடையாது அக்கா, அண்ணி போன்ற ரோல்களில் நடித்து வருபவர் தான். இருப்பினும் நடிகையை அடைந்தே தீர வேண்டும் என்று அந்த அரசியல்வாதி அவர் கேட்ட பணத்தை கொடுத்திருக்கிறார்.
இந்த விஷயம் தற்போது மெல்ல மெல்ல மீடியாவில் கசிந்து வருகிறது. நடிகைக்கு இவ்வளவு தைரியமா என்று அந்த அரசியல்வாதியிடம் இலவசமாக சென்ற நடிகைகள் ஆச்சரியத்துடன் இருக்கிறார்களாம்.